69. தெய்வம் உன் உள்ளிருக்கு (தெய்வத்தின் தேரெடுத்து)**


 
(#** தெய்வத்தின் தேரெடுத்து) (* ஆன்ம ஞானம்)
 
 
விற்பனைக்குக் கிட்டிடாது … ஞானமும்-ஓர் பொருளிலையே
நான் புரியும் பூஜையிலும் … கடவுள் வந்து தோன்றவில்லை
_______________________________________________
 
தெய்வம்-உன் உள்ளிருக்கு அங்கு-நீ தேடு
கோயில்-உன் நெஞ்சமென்று பூஜை-செய்..தாடு
(2)
(MUSIC)
பாருக்குள் சாமி தான்-வந்த போதும்
நிஜமில்லை என்பாய் பாரு-அப்போதும்
(2)
நானும்-என்றே இருந்தாய் ஆணவத்தோடு (2)
யாரை நோவதம்மா அவன் விளையாட்டு
இறை-விளை..யாட்டு..
தெய்வம்-உன் உள்ளிருக்கு அங்கு-நீ தேடு
கோயில்-உன் நெஞ்சமென்று பூஜை-செய்..தாடு
(MUSIC)
நீ-சுற்றக் கோயில்-பல பாரினில் இருக்கு
நெஞ்சத்தின் கோயில்-அந்தோ பாழென இருக்கு
தான்-எனும் ஆணவமே அதில்-நிறைந்திருக்கு
இருள்-எனும் சனி அன்றோ அதில்-குடி இருக்கு
இடம் பிடித்திருக்கு
தெய்வம்-உன் உள்ளிருக்கு அங்கு-நீ தேடு
கோயில்-உன் நெஞ்சமென்று பூஜை-செய்..தாடு
(MUSIC)
நெஞ்சினில் கும்பிடுவாய் நல்-வழி காண்பாய்
சலிக்காமல்-த்யானம் அதில் நோன்பினை நோற்பாய்
(2)
பாரினையே துறந்து பாருனை உள்ளே (2)
இதை உணராமல் என்றும் இறை-ஒளி இல்லை
உனை உணராமல் என்றும் இறை-ஒளி இல்லை
தெய்வம்-உன் உள்ளிருக்கு அங்கு-நீ தேடு
கோயில்-உன் நெஞ்சமென்று பூஜை-செய்..தாடு
 
 
 
 


Comments