(#** அச்சம் என்பது மடமையடா) (* ஆன்ம ஞானம்)
ஞானம் என்பதுன் உடமையடா
(Short Music)
அறியாமல் ஏன்-இன்னும் மடமையடா (2)
ஞானம்-என்பதுன் உடமையடா அறியாமலேன்-இன்னும் மடமையடா (2)
சாவெனும் நோவு தொடர்ந்திடும் பாரு
எதுவரை அதன் வசம் இருப்பதடா
இறை என்னும் நிஜம் நீ உணர்ந்திடடா
ஞானம் என்பதுன் உடமையடா அறியாமல் ஏன் இன்னும் மடமையடா
(MUSIC)
ஒவ்வொரு உயிரிலும் தன்னை எடுத்துப்
பொறியென வைத்தான் வாலிறைவன்.. ..ஆ..ஆ..ஆஆஆ
ஒவ்வொரு உயிரிலும் தன்னை எடுத்துப்
பொறியென வைத்தான் வாலிறைவன்
இதனை-உணர்ந்து சாதனை-ஏற்று அறிந்திடவேண்டும் நீ அவனை
ஞானம் என்பதுன் உடமையடா அறியாமல் ஏன் இன்னும் மடமையடா
(MUSIC)
கருவினில் தொடங்கி உயிர் விட்ட பின்னும்
தொடர்ந்திடும் ஆத்மா இது உண்மை ..ஆ..ஆ..ஆஆஆ
கருவினில் தொடங்கி உயிர் விட்ட பின்னும்
தொடர்ந்திடும் ஆத்மா இது உண்மை
சதமாய்-உடலை நினைத்திடஉன்னை வைத்திடுமாமுன் அறியாமை
ஞானம் என்பதுன் உடமையடா அறியாமல் ஏன் இன்னும் மடமையடா
(MUSIC)
பாரினில்கோடிக் கோவிலில்தேடி ஓடுகின்றாயந்த ஆண்டவன் யார்
(1+Short Music+ 1)
உள்ளே-ஆத்மா அது-என-மறந்து பைத்தியம் வெளியே அலைகின்றாய்
ஞானம் என்பதுன் உடமையடா அறியாமல் ஏன் இன்னும் மடமையடா
சாவெனும் நோவு தொடர்ந்திடும் பாரு
எதுவரை அதன் வசம் இருப்பதடா
இறை எனும் நிஜம் நீ உணர்ந்திடடா
Comments
Post a Comment