67.சொல்லுவாய் இரண்டெழுத்து (கண்ணிலே குடியிருந்து)

Read along with Original Track - click here

(#** கண்ணிலே குடியிருந்து) (* இறை நாம மகிமை)
 
சொல்லுவாய் இரண்டெழுத்து வேதங்களும் அதனில்-உண்டு
சொல்லு இன்று..ராம ராம ராம என்று
சிந்தையிலே உருகிச்சொல்லு ஞானம்-தரும் வார்த்தை ஒன்று
சொல்லு இன்று..ராம ராம ராம என்று
(2)
(MUSIC)
சீதைதந்த மாலை-முத்தைக் கடித்துச்-சுவைத்து பார்த்து பின்னால்
ராமச்சுவை அதனில்-இல்லை என்றுஅனுமன் சொன்னான் அன்று
(1+Short Music+ 1)
ராம என்ற இரண்டெழுத்தைக் கள்ளன் கூடச் சொல்லியதால்
நெஞ்சை-அள்ளும் படி-கொடுத்தான் ராமகாதை என்றே பின்னால்
சொல்லுவாய் இரண்டெழுத்து வேதங்களும் அதனில்-உண்டு
சொல்லு இன்று..ராம ராம ராம என்று
சிந்தையிலே உருகிச்சொல்லு ஞானம்-தரும் வார்த்தை ஒன்று
சொல்லு இன்று..ராம ராம ராம என்று
(MUSIC)
சத்தியத்தைக் கூறிடவே எனக்குத் தயக்கம் இல்லையடா
முக்தி-வித்தை இரண்டெழுத்தே போக்கும்-ஜன்மத் தொல்லையடா
(1+Short Music+1)
பார் முழுதும் பேசிடவே அதன் பெருமை விளங்குதடா
உண்மை-கண்ட நல்லோர்-எல்லாம் உரைத்த-நாமம் ராமா ராமா
சொல்லுவாய் இரண்டெழுத்து வேதங்களும் அதனில்-உண்டு
சொல்லு இன்று..
ராம ராம ராம என்று ராம ராம ராம என்று(2)
சொல்லுவாய் இரண்டெழுத்து வேதங்களும் அதனில்-உண்டு
சொல்லு இன்று..
ராம ராம ராம என்று
சிந்தையிலே உருகிச்சொல்லு ஞானம்-தரும் வார்த்தை ஒன்று
சொல்லு இன்று..
ராம ராம ராம என்று(2)
 
Comments