(#** ஆளுக்கொரு தேதி வச்சு ) (* ஆன்ம ஞானம்)
“ஏஷஸ்வயம் ஜ்யோதி ரசேஷா விஞ்ஞான கோசே விலஸத்ய ஜஸ்ரம்”
அனைத்தின் சாக்ஷியாக ஆத்மா, விஞ்ஞான கோசத்தில்
இடையறாதொளிர்கிறது
- விவேக சூடாமணி
________
________
நெஞ்சே உனக்கென்ன அறியாமை நோயோ நீ ..
கொண்ட-உடல் எத்தனையோ புலப்பட வில்லையோ (2)
யாருக்குள்ளும் இறைப் பொறியாய் ஆண்டவன் இருக்கான்
ஆண்டவன் இருக்கான்
(2)
உள்ளே பார்தெளிவாய் யோகம்கொண்டு நான்எனத் தெரிவான் (2)
யாருக்குள்ளும் இறைப் பொறியாய் ஆண்டவன் இருக்கான்
ஆண்டவன் இருக்கான்
(MUSIC)
பூமி வந்து பொறந்ததுமே மனத்திலஹங்..காரம்
சாமி அன்றி நீயுமில்லே உனக்கு என்ன வீரம் (2)
யாருக்குள்ளும் இறைப் பொறியாய் ஆண்டவன் இருக்கான்
ஆண்டவன் இருக்கான்
(MUSIC)
பாரிடத்தில் மோக மனம் ஓயாமல் ஓடும்
சாகும் வரை ஓரிடத்தில் நில்லாமல் ஆடும் (2)
(MUSIC)
சொந்த-இடம் வந்திடத்தான் உனக்குத்-தந்தான் மூச்சு (2)
உள் புகுந்தே தேடிடாமல் உலகில் என்ன பேச்சு (2)
எத்தனைத்-தான் சொன்னாலும் புத்தி கெட்டுத் திரியும் ஆ..ஆ..ஆ..
எத்தனைத்-தான் சொன்னாலும் புத்தி கெட்டுத் திரியும்
தன்னப் பத்தி எண்ணாத மனத்துகென்ன புரியும்
தன்னப் பத்தியே நினைக்கும் மனத்துக்கென்ன புரியும்
யாருக்குள்ளும் இறைப் பொறியாய் ஆண்டவன் இருக்கான்
ஆண்டவன் இருக்கான்
Comments
Post a Comment