(#** தெய்வத்தின் தேரெடுத்து) ( * அன்பு)
அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்
அன்பே சிவமாவ தியாரு மறிகிலார்
அன்பே சிவமாதி யாரு மறிந்திடின்
அன்பே சிவமா யமர்ந் திருந்தாரே
- திருமூலர் திருமந்திரம்
________________________________________________
விற்பனைக்கு ஏது-அன்பு காசு-கொண்டே வாங்கவென்றே
காசுக்கதை விற்கும்-திறம் கடவுளுக்கும் கூட-இல்லை
தெய்வத்துக்கே இருக்கு ஆயிரம் பேரு
அதற்கிணை..யாகச் சொல்ல இருக்குது வேறு
(2)
(MUSIC)
(MUSIC)
சாமிக்கும் சாமி அது-என்று தேறு
அதற்குமே உண்டாம் அன்பெனும் பேரு
(2)
வேதத்திலே இருக்கு *ஐந்தெனப் பாரு (2)
*த்யாகம் என்பதுமே வேறென்ன கூறு ..வேறென்ன கூறு
தெய்வத்துக்கே இருக்கு ஆயிரம் பேரு
அதற்கிணையாகச் சொல்ல இருக்குது வேறு
(MUSIC)
நீ வற்றி போன-பின்னும் உனதென இருக்கும்
அதைப்-பற்றி இருந்திடுமாம் உலகத்தின் துடிப்பும்
மாபெரும் யாகம்-பிறர் போற்றிட எதற்கு
யாவினும் **நனி நன்றாம் அன்பெனும் சிறப்பு அன்பெனும் சிறப்பு
தெய்வத்துக்கே இருக்கு ஆயிரம் பேரு
அதற்கிணையாகச் சொல்ல இருக்குது வேறு
(MUSIC)
(MUSIC)
என்பிலை என்பதனால் வெய்யிலும் காய்வான்
அன்பிலை என்பதனால் அறம்-அது..போலாம்
(2)
ஞானத்திலே பிரிது அன்பன்றி இல்லை (2)
இதை உணராமல் உன்னில் உயர்வென்றும் இல்லை
இறை உணராமல் உன்னில் உயர்வென்றும் இல்லை
தெய்வத்துக்கே இருக்கு ஆயிரம் பேரு
அதற்கிணை..யாகச் சொல்ல இருக்குது வேறு
அதற்கிணை..யாகச் சொல்ல இருக்குது வேறு
Ø * ஐந்து வகையான யக்ஞங்கள்- ப்ரும்ம யக்ஞம், தேவ யக்ஞம், பித்ரு யக்ஞம், மனுஷ்ய யக்ஞம், பூத யக்ஞம்.இவை அன்புடன்,லோக க்ஷேமார்த்ததுடன் புரியும் த்யாகம்(Sacrifice) எனவே அழைக்கப் படுகிறது .. ** நனி - மிகவும் /சால
Comments
Post a Comment