63. என்னை யாரென்று (என்னை யாரென்று எண்ணி எண்ணி)

(#** என்னை யாரென்று எண்ணி எண்ணி) (* இறை தேடல்)
 
என்னை யாரென்று சொல்லி எந்தன் நிஜம் காட்டிடாய்
தினம் நான் பாடும் பாடலுக்குச் செவி சாய்த்திடாய்
நான் உன் பேரை எந்நாளும் மறவேன் ஐயா
என் பாடல் வழியாகச் சொல்வேன் ஐயா
என்னை யாரென்று சொல்லி-எந்தன் நிஜம் காட்டிடாய்
தினம் நான் பாடும் பாடலுக்குச் செவி சாய்த்திடாய்
(MUSIC)
என்றும் நிலையாது இவ்வாழ்வு என்றாய் ஐயா
விலகாது என் சாவு என்றாய் ஐயா
உணராயோ என-நீயும் உரைத்தாய் ஐயா (2)
காற்றோடு உன்-கீதை போச்சே ஐயா
என்னை யாரென்று சொல்லி-எந்தன் நிஜம் காட்டிடாய்
(MUSIC)
உந்தன் இடம்-கோயில் என்றே-தான் சொன்..னார் ஐயா
பலர்-கூற உனைக் காணச் சென்றேன் ஐயா
நிஜம்-உன்னை நான்-தேடிக் களைத்தேன் ஐயா(2)
ஏமாற்றம் ஒன்றே-தான் கொண்டேன் ஐயா
என்னை யாரென்று சொல்லி-எந்தன் நிஜம் காட்டிடாய்
தினம் நான் பாடும் பாடலுக்குச் செவி சாய்த்திடாய்
(MUSIC)
எங்கும் உனைக்-காண உயர்-யோகம் புரியேன் ஐயா உந்தன்
ஒளி-வீச ஒரு-த்யானம் புரியேன்-ஐயா
என்வாழ்வு ஏன்-என்று அறியேன் ஐயா (2)
அன்போடு அதை-நீயும் கூறாய் ஐயா
என்னை யாரென்று சொல்லி-எந்தன் நிஜம் காட்டிடாய்
தினம் நான் பாடும் பாடலுக்குச் செவி சாய்த்திடாய்
என்னை யாரென்று சொல்லி-எந்தன் நிஜம் காட்டிடாய்

Comments