60. ஆட்டுவித்தா ஆடுகிறாய்(ஆட்டுவித்தால் யாரொருவர்)

(#** ஆட்டுவித்தால் யாரொருவர்) (* இறை ஊடல்)
 
 
 
ஆட்டுவித்தா ஆடுகிறாய் அதனால் என்ன கண்ணா
நானொரு கை பார்த்திடுவேன் பயமா என்ன கண்ணா
(1+Short Music+1)
நீ நடத்தும் நாடகத்தில் எந்தன் பங்கு (2)
உன் நிழலைப் போலே நடித்திடுவேன் நானும் இங்கு
புரிந்திடுவேன் நானும் சேவை பரிவினாலே
தானாய்த் தெரிந்திடுவாய் நீயுமெந்தன் யோகத்தாலே
தெரிந்திடுவாய் நீயுமெந்தன் யோகத்தாலே
ஆட்டுவித்தா ஆடுகிறாய் அதனால் என்ன கண்ணா
நானொரு கை பார்த்திடுவேன் பயமா என்ன கண்ணா
(MUSIC)
உன்-ஜோலி என்னிடத்தில் ஆகாதய்யா
நானும் பார்த்திடுவேன் உனை ஒரு-கை கீதையின் வழியாய்
நானிருக்கும் இடத்தில்-இருந்தே உன்னைக் காண்பேன்
எந்தன் உள்-பு..குந்து எந்தன்-ரூபம் உண்மை காண்பேன்
யோகம் செய்து எந்தன் ரூபம் உன்னைக் காண்பேன்
ஆட்டுவித்தா ஆடுகிறாய் அதனால் என்ன கண்ணா
நானொரு கை பார்த்திடுவேன் பயமா என்ன கண்ணா
(MUSIC)
உடலின்-புதிர் கண்டே-நான் மயங்க மாட்டேன்
அது புரியுமிடர் கண்டே-நான் கலங்க மாட்டேன்
*உன்னதென்றே உள்ளதெல்லாம் உணர்வேன் கண்ணா
அதை உணர்ந்திடுங்கால் உன்னிரு-தாள் தெரியும் தன்னால்
உணர்ந்திடுங்கால் உன்னிரு தாள் தெரியும் தன்னால்
ஆட்டுவித்தா ஆடுகிறாய் அதனால் என்ன கண்ணா
நானொரு கை பார்த்திடுவேன் பயமா என்ன கண்ணா

Comments