59. ஆசையைத் தானே மனம் (ஆசையினாலே மனம்)



Please Readalong with the Original Track - Click here for it

(#** ஆசையினாலே மனம்) (* மனம்)



ஆசையைத்தானே மனம் கொள்ளுது எண்ணுது தினம்
அதன்-பின்னாலே போனதாலே தன்னையே மறந்தது அதும்


(2)
(MUSIC)
தானாய் நின்ற ப்ரம்மம்-வேறு வேலை-இன்றியே
இரு பேராய் ஆக உலகம் தன்னில் ஜீவன் ஆனதே
(1+Short music+1 )
பிள்ளையார் எனவே-அதும் பிடிக்கப்-போக அந்த-மனம்
வாலிலாத குரங்கு-போலே வந்து-சேர்ந்தது என்னில்
ஆசையைத்தானே மனம் கொள்ளுது எண்ணுது தினம்
அதன் பின்னாலே போனதாலே தன்னையே மறந்தது அதும்
(MUSIC)
காலம் இன்றி நேரம் இன்றிப் பேயாய் அலையுதே
புது மோகம் கொண்டு ஜாலம் என்று தன்னால் புரியுதே
(2)
அதற்கு இல்லை-ஒரு அணை அதற்கு இல்லை-ஒரு இணை
ஓடி-உலகில் அலைவதாலே மயங்கி மறந்தது தன்னை

ஆசையைத்தானே மனம் கொள்ளுது எண்ணுது தினம்
அதன் பின்னாலே போனதாலே தன்னையே மறந்தது அதும்
(2)

Comments