(#** ஆடி வா ஆடி வா )(* இறை நாம மகிமை )
ஆயிரம்-பேர்கள் அவன்-தரித்தாலும் ஆண்டவன் நூறு இல்லை
ஆயிரம்-ரூபம் அவன்-எடுத்தாலும் அவன்-நிஜம் வேறு இல்லை
கூறுவாய் கூறுவாய் ராம ராம் (2)
கூறத் தயக்கமென்ன கூறுவாய்
அட நெஞ்சே மயக்கமென்ன பாடுவாய்
கூறுவாய் கூறுவாய் ராம ராம்
(MUSIC)
*தலை மீது மலராட நீ கூறுவாய்
**குழல் இசை ஒன்றை நீ கேட்க பேர் கூறுவாய்
உடல் மீறி நீ போக பேர் கூறுவாய் (2)
என் நெஞ்சே நீ உனை வென்று நிஜம் காணுவாய்
கூறுவாய் கூறுவாய் ராம ராம்
(MUSIC)
எளிதாக வால்மீகி தான் சொன்ன தாம்
தினம் நாம் பாடப் பாட்டாக அவர் தந்த ராம்
படகாக மிதக்கின்ற கல் மீது ராம்
ஒரு முறை சொன்னால் மறையோதும் பலன் சேர்க்கு மாம்
கூறுவாய் கூறுவாய் ராம ராம்
(MUSIC)
கடவுட்கும் மேல் அவனின் பேர் அல்லவோ
அதை உரைப்போர்க்கு சேரும்-நல் சீரல்லவோ
உயர்வுக்கும் சிறப்புக்கும் வழி காட்டும் ராம்
பெரும் பூஜைக்கு பதிலாக நீ கூற வா
கூறுவாய் கூறுவாய் ராம ராம்
கூறத் தயக்கமென்ன கூறுவாய்
அட நெஞ்சே மயக்கமென்ன பாடுவாய்
கூறுவாய் கூறுவாய் ராம ராம்
* யோக சாதனையில் சஹஸ்ர தள தாமரை மலர்தல்
** சாதனையில் உள்ளுணர்வு மேலெழும்புங்கால் கேட்கும் தெய்வீக இசைஒலி
Comments
Post a Comment