57. அழியும் உடலை (அகர முதல எழுத்தெல்லாம்)

(#** அகர முதல எழுத்தெல்லாம்) (* உடல் உணர்வு) (* மனம்)

அழியும்-உடலை நீ-என்றே எண்ணுகிறாய் நெஞ்சே
(Short Music)
மேனி உணர்வில் உனதென்றே உளறுகிறாய் நெஞ்சே
(Short Music)
கணம் விழும் மானிட தேகம் போற்றி வந்தாய் நீயே
(Short Music)
ஈன்றவன் ஈசன் என்று மறந்து விட்டாய் நெஞ்சே
(Short Music)
அழியும்-உடலை நீ-என்றே எண்ணுகிறாய் நெஞ்சே (2)
மேனி உணர்வில் உனதென்றே உளறுகிறாய் நெஞ்சே (2)
அழியும்-உடலை நீ-என்றே எண்ணுகிறாய் நெஞ்சே
(Short Music)
கணம்-விழும் மானிட-தேகம் போற்றி வந்தாய் (2)
ஈன்றவன் ஈசன்-என்று மறந்து விட்டாய் (2)
தெரியும் எனக்கெல்லாம் என்றுரைத்தாய் (2)
ஊமையாய் வாய் அடைத்து திகைக்க வைத்தாய்
என்னை திகைக்க வைத்தாய்
அழியும்-உடலை நீ-என்றே எண்ணுகிறாய் நெஞ்சே
(MUSIC)
எண்ணும் எண்ணம் நீ என மறந்தாய் (2)
மாற்றம் கொளும் உலகை ஆற்றல் என்றாய் (2)
ஐயோ.. நாணம் விட்டே பைத்தியம் போல் (2)
சுகம்-ஒன்றே குறி-என்றே ஓடுகின்றாய் (2)
அஹங்கார நோய்-கொண்டு ஆடுகின்றாய் நெஞ்சே

Comments