56. எண்ணங்களின் கூட்டம் (கங்கைக் கரைத் தோட்டம்)

(#** கங்கைக் கரைத் தோட்டம்) (* யோகம்)
எண்ணங்களின் கூட்டம் ஓய இறை நாட்டம்
            யோகம் என்பதிதே ஓ..ஓ..ஓ..யோகம் என்பதிதே   
த்யானம் எனும் நோன்பு பூண வரும்..மாண்பு
கீதை சொல்கிறதே ஓ.. பாதை என்கிறதே
(1+ஆ...+1)
(MUSIC)
எண்ணங்களின் தோற்றம் சென்றே அந்த-மனம் ஓய்ந்த பின்னே (2)
திண்ணமெனத் தோன்றுமங்கே ஆன்மம் ஒளியாக நன்கே (2)
எண்ணம் என்பதேனோ யோகம் கொள்ளத்தானோ
உண்மை வேறிலையே ஓ.. உண்மை வேறிலையே
எண்ணங்களின் கூட்டம் ஓய இறை நாட்டம்
யோகம் என்பதிதே ஓ..ஓ..ஓ..யோகம் என்பதிதே
(MUSIC)
வாயிலவன் பேரைச்-சொன்னால் கையிலன்புச் சேவை-கொண்டால் (2)
நெஞ்சமது கோவில் என்றால் பூஜை-என்று வேறு உண்டா (2)
வேதம் சொன்ன கூற்று  வேறு  இல்லை மாற்று
யோகம் என்பதிதே ஓ..யோகம் என்பதிதே
அன்று வந்த கண்ணன் சொன்னதிந்த கீதை
யோகம் வேறெதுவோ ..ஓ...யோகம் வேறெதுவோ
(MUSIC)
உந்தன் முக ஊனக் கண்கள் உண்மைதனைக் காண்பதில்லை (2)
ஆசைகளைக் கொண்ட உள்ளம் இன்ப வெள்ளம் சேர்வதில்லை (2)
எண்ணம் விழும் நாளே சென்று விடும் ஊழே
அவனில் கரைவோமே ஓ .. யோகம் இது தானே
கீதை தந்த கண்ணன் மேகக் கரு வண்ணன்
பேரைச் சொல்வோமா ஓ ..யோகம் கொள்வோமா
கண்ணா.. கண்ணா.. கண்ணா..
எண்ணங்களின் கூட்டம் ஓய இறை நாட்டம்
      யோகம் என்பதிதே ஓ..ஓ..ஓ..யோகம் என்பதிதே






Comments