55. உடலும் இலையே(கருணை மழையே மேரி மாதா)

(கருணை மழையே மேரி மாதா) (* ஆன்ம ஞானம் )

“ ரசவாதம் புரிந்து பொன்னைப் பெற்றாய் உண்மை ரசத்தைப் பெற்றாயா ?
   உன்னுடைய பல யோகங்களாலே நல்ல உடலைப் பெற்றாய் ,
  ஆத்ம ஞானத்தை அடைந்தாயா ? 
  உன்னுடைய பேச்சாலும் வாதங்களாலும் வார்த்தை மாலைகளை 
  அலங்காரமாய்த் தொடுத்தாய் ,ஆன்மத்தை விண்டாயா? "

   -   அல்லாமப் ப்ரபு (ப்ரபு லிங்க லீலை)
 
உடலும்-இலையே உள்..ளம்-இலையே உண்மை-அறியாயோ
கண்கள்-காணும் பாழும்-உலகம் மாயம்-அறியாயோ
(2)
உடலும் இலையே உள்..ளம் இலையே உண்மை அறியாயோ
(MUSIC)
வேதம்-அறிந்தாய் வாதம்-புரிந்தாய் உண்மை உணர்ந்தாயோ (2)
கல்லைப்-பொன்னாய் மாற்றும்-*வாதம் புரிந்து-கண்டாயோ ரசத்தைக் கண்டாயோ
உடலும் இலையே உள்..ளம் இலையே உண்மை அறியாயோ
கண்கள் காணும் பாழும் உலகம் மாயம் அறியாயோ
உடலும் இலையே உள்..ளம் இலையே உண்மை அறியாயோ
(MUSIC)
**சொத்தை-உடலைப் போற்றிக்-காக்கும் யோகம்-கொண்டாயே (2)
முத்தைப்-போலே விளங்கும்-உந்தன் உண்மை மறந்தாயே
பாழும்-உடலும் வீண்-தானே அலையும்-மனதே வீண்தானே
உலகத்-திறன்கள் வீண்-தானே விழித்துக் கொள்வாய் தன்னாலே
முன்னாலே..
உடலும்-இலையே உள்..ளம்-இலையே உண்மை-அறியாயோ
கண்கள்-காணும் பாழும்-உலகம் மாயம்-அறியாயோ
உடலும்-இலையே உள்..ளம்-இலையே உண்மை-அறியாயோ

Comments