54. ஏன் தான் மனத்தின்-பின் அலைகின்றேன்(பிருந்தாவனத்துக்கு)



(#** பிருந்தாவனத்துக்கு வருகின்றேன் )
(* இறைஞ்சல்/இறை கெஞ்சல்) (* மனம்)
 
க்ருஷ்ணா.. க்ருஷ்ணா.. க்ருஷ்ணா
ஏன் தான் மனத்தின்-பின் அலைகின்றேன்
என அடிக்கடி எனை-நான் கேட்கின்றேன்
(2)
க்ருஷ்ணா நான் ஒரு கைதியோ
உன் படைப்பினி..லே-இது நீதியோ
ஏன் தான் மனத்தின்-பின் அலைகின்றேன்
என அடிக்கடி எனை-நான் கேட்கின்றேன்
(MUSIC)
க்ருஷ்ணா.. க்ருஷ்ணா.. க்ருஷ்ணா
கீதையின் அறிவுரை போறலையே
என் மண்-எனும் சிறுமதி ஏறலையே
(2)
போதையை என் மனம் விடவில்லையே
பகவான் உன்னிடம் அது இல்லையே
ஏன் தான் மனத்தின்-பின் அலைகின்றேன்
என அடிக்கடி எனை-நான் கேட்கின்றேன்
(MUSIC)
என்-மனம் அது-தான் பொன்-வேலி
அதை உடைத்திட வேண்டுமுன் தாள்-தூளி
(2)
தங்கத்தில் ஆயினும் கூண்டில்லையோ
அதில் அகப்பட்டுத் துடிக்கும்-நான் கிளி இல்லையோ
ஏன் தான் மனத்தின்-பின் அலைகின்றேன்
என அடிக்கடி எனை-நான் கேட்கின்றேன்
(MUSIC)
*கங்கையின் துளிநீ..ரருந்தீரோ-அந்த கீதையின் ஓரடி அறிந்தீரோ
(2)
என்றிடும் உயர்-பஜ கோவிந்தமும்
எந்தன் மனதுக்கு ஏன்-தான் புரியலையோ
ஏன் தான் மனத்தின்-பின் அலைகின்றேன்
என அடிக்கடி எனை-நான் கேட்கின்றேன்
க்ருஷ்ணா நான் ஒரு கைதியோ
உந்தன் படைப்பினி..லே-இது நீதியோ
க்ருஷ்ணா.. க்ருஷ்ணா.. க்ருஷ்ணா.. க்ருஷ்ணா.. க்ருஷ்ணா.. க்ருஷ்ணா
 






 


Comments