51. மறைந்திருந்தே (மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன)



(#** மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன)
(* இறைஞ்சல்/இறை கெஞ்சல் )


ஜதி

மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன.. ஏனோ..
 

மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன
எந்தன் மெய் வழியாய் சொந்த மெய் விழியால்
என்னை மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன
(2)

பல பிறப்பும் (SM) உலகில் பல பிறப்பும்


யுகம் யுகமாய் உலகில் பல பிறப்பும்
தங்கி இனித்திருக்க உடலின் தனி வடிவும்
(2)
கொண்டு
மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன
ஜதி
எங்கிருந்தாலும் உந்தன் மெய் உணர்வே
என்னை பார்த்திடுமே என்றே கேட்டிருக்கேன்
(2)
நானுந்தன் நிஜம் காண ஞானமாம் (2)
இந்த பாவிக்கு நீ காட்ட வேண்டாமா (2)
ஆண்டவா ஆண்டவா என்று-நான் வாடவா

மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன
ஜதி

 
நானெங்கய்யா உண்மை நிலை காண்பேன்
என்ற சோகத்திலே செத்தே நான் மறைவேன்
(2)
லோகத்தி..லே-மீண்டும் பிறந்திடுவேன் (2)
எந்த காலத்திலே உண்மை உணர்ந்திடுவேன்
எந்த காலத்திலே உன்னை உணர்ந்திடுவேன்
ஆண்டவா ஆண்டவா என்று-நான் வாடவா

மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன
ஜதி

தேறாத நெஞ்சோடு அழுதழுது நான்வாட
கரைந்த கண்ணில் நீருமோட
கூரான வினையோடு உலகினிடை தினம்வாட
கெஞ்சியுனைக் கசிந்து பாட
கனிவோடு
துயர் போக்க இருள்நீக்க என்மீது இரங்கியே எனைக்காக்க ஓடிவருவாய்

தீன-சம் ரக்ஷகா .. ஹே-ஜக..தீஸ்வரா
எனைக் காக்க ஆண்டவா வா

மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன
எந்தன் மெய் வழியாய் சொந்த மெய் விழியால்
என்னை மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன



Comments