50. என்னுடலே தான் நானா (மன்னவனே அழலாமா)



(#** மன்னவனே அழலாமா) (* உடல் உணர்வு)
 
.....
என்னுடலே தான்-நானா என்னுடலே நான்-தானா
ஊனுடலாய் நான்-இருக்க எப்படித்தான் நான்-நினைக்க
சொல்லய்யா .. சொல்லய்யா .. இறைவா ... + (SM)
என்னுடலே தான்-நானா என்னுடலே நான்-தானா
ஊனுடலாய் நான்-இருக்க எப்படித்தான் நான்-நினைக்க
(MUSIC)
என்னில்உள்ள என்-நானும் கண்ணில் என்றும் தெரிவதில்லை (2)
ஏட்டுச்சுரை கொண்டாரும் கறியை சமைத்துண்பதில்லை (2)
கண்ணைக் கட்டி அறியாமை விதைத்தவனும் நீ அல்லவா
கையைக் கட்டி வாராமல் இருப்பதுவும் வீணல்லவா
சொல்லய்யா .. சொல்லய்யா .. இறைவா
என்னுடலே தான்-நானா என்னுடலே நான்-தானா
ஊனுடலாய் நான்-இருக்க எப்படித்தான் நான்-நினைக்க
(MUSIC)
என் மயக்கம் தீர்க்க-என்னால் முடியா..தது-தெரியாதா (2)
உன் குழந்தை புரியாமல் தவிக்கின்றேன் அறியாயோ (2)
அன்புக் கடல் நீ-என்றால் இன்றெனக்கு மெய் விளக்கு
மெய்யறிவை மறைத்திடுமென் அறியாமை திரை விலக்கு
ஆண்டவா ..ஆண்டவா ..ஆண்டவா ..
என்னுடலே தான்-நானா என்னுடலே நான்-தானா
ஊனுடலாய் நான்-இருக்க எப்படித்தான் நான்-நினைக்க
 
 
 
 
 

Comments