49. மனது உரைப்பதுண்டு(மனிதன் நினைப்பதுண்டு)

(#** மனிதன் நினைப்பதுண்டு) (* மனம்)



மனது உரைப்பதுண்டு தானும் அமைதி என்று
அதுவும் நடக்குதின்று எதிரும் புதிருமென்று
(Short Music)
மனது உரைப்பதுண்டு தானும் அமைதி என்று (2)
அதுவும் நடக்குதின்று எதிரும் புதிருமென்று (2)
மனது உரைப்பதுண்டு நானும் அமைதி என்று
(MUSIC)
மனதை உடன் படைத்தான் நானும் இடம் கொடுத்தேன் (2)
இன்று கலங்குகிறேன் அது என்று விலகுமென்றே
அதனை நினைத்திடவே அழுகை வருகின்றது
அழுது லாபமென்ன அதன் ஆட்சி நடக்கின்றது
மனது உரைப்பதுண்டு தானும் அமைதி என்று
(MUSIC)
என்னை விட்டு விடு நீ உன்னை வணங்குகிறேன் (2)
கூட்டைப் பிரிந்திடும் நாள் அன்று பறந்து பயனில்லையே
காட்டு விலங்கினைப் போய் மனது என அழைத்தோம்
அதனில் மாட்டிக்கொண்டால் அய்யோ தினமும் தரிகிடதோம்
மனது உரைப்பதுண்டு தானும் அமைதி என்று
(MUSIC)
விதியை நோவதிலே ஒரு பயனும் இல்லையடா
மதியின் துணை கொள்ளடா அந்த மனதை வென்றிடடா
இழக்க நஷ்டமில்லை அதன் இழப்பு லாபமடா
கணக்கைப் புரிந்து கொண்டேன் என் கவலை தீர்ந்ததடா
மனது உரைப்பதுண்டு தானும் அமைதி என்று
அதுவும் நடக்குதின்று எதிரும் புதிருமென்று





Comments