(#** அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்) ) (* மனம்)
நித்தியம் மனம் வந்திடும் ஆ..ஆ..ஆ..
ஆசைகள் இடர்களே தந்திடும்
அடடா மனதில் வரும் ஆசைகொண்டே..ஆ..ஆ..ஆ..
______________
______________
அடடா மனதில் வரும் ஆசை கொண்டே
பார் அதனிடத்தில் நான்-வகையாய் மாட்டிக்கொண்டேன்
(1+Short music+1)
புலியின் வாலெனவே அதைப் பிடித்தேன்
அதை விடவும் முடியாமல் நான்-தவித்தேன்
(2)
ஆ..ஆ..ஆ..
பார் அதனிடத்தில் நான்-வகையாய் மாட்டிக்கொண்டேன்
(MUSIC)
தினம்-அதி காலையிலே எழுந்திடும் வேளை-தொட்டே ஆ..ஆஆஆ..
தினம்-அதி காலையிலே எழுந்திடும் வேளை-தொட்டே
சனி-என மனம்-எனையே பிடித்துடன் வருகுதைய்யா (2)
கண்ணிரண்டில் என்னழுகைப் பார்த்துமது இரங்கவில்லை(2)
சொல்லொணா ஆட்டமும்தான் கொள்ளுதே ஆணவத்தால்
கொள்ளுதே ஆணவத்தால்
ஆ..ஆ..ஆ..
அடடா மனதில் வரும் ஆசை கொண்டே
பார் அதனிடத்தில் நான் வகையாய் மாட்டிக்கொண்டேன்
(MUSIC)
மலை-மேல் ஒரு கணமும் மடுவில் மறு கணமும்(2)
நெஞ்சலைந்து திரிந்து வந்தால் என்னத்தான் செய்யுவேனோ (2)
மனமே அடங்காயோ துளியும் இளகாயோ (2)
என்னையே வருத்தல்-உந்தன் பெருமைக்கு அழகாமோ
பெருமைக்கு அழகாமோ… ஆ..ஆஆஆ..
அடடா மனதில் வரும் ஆசை கொண்டே
பார் அதனிடத்தில் நான் வகையாய் மாட்டிக்கொண்டேன்
Comments
Post a Comment