44. முக்தி தரும் வித்தையடி(அத்தை மடி மெத்தையடி)

(#** அத்தை மடி மெத்தையடி) (* இறை நாம மகிமை)

ஹரேராமா ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்ராம் (2)

முக்தி-தரும் வித்தையடி த்யானம்-ஒன்று தானம்மா
நாமம்-ஒன்றைக் கூறி-வந்தால் த்யானம்-அது தானம்மா
முக்தி-தரும் வித்தையடி
(1+MUSIC+1)
ஹரேராமா ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்ராம் (2)
ஊனாம் சிறையின் கட்டு-விட்டு ஊழாம் வினையின் தொல்லை விட்டு
ஓம்-எனும் ப்ரணவம் நெஞ்சோடும் “*நான்” அதைகேட்டு வந்தாடும்
உந்தன் நான் அதைகேட்டு வந்தாடும் ..ஓர்..
முக்தி-தரும் வித்தையடி த்யானம்-ஒன்று தானம்மா
நாமம்-ஒன்றைக் கூறி-வந்தால் த்யானம்-அது தானம்மா
முக்தி-தரும் வித்தையடி
(MUSIC)
மேலாம் யோகமும் ஒன்று இல்லை
வேறோர் மார்க்கமோ ரொம்பத் தொல்லை
(1+MUSIC+1)
நெஞ்சோர் கோவிலாய் ஆக்கிவிடு நம்பிக்கையாய் நாமம் சொல்லித் தொழு
முழு நம்பிக்கையாய் நாமம் சொல்லித் தொழு
ஓர்..
முக்தி-தரும் வித்தையடி த்யானம்-ஒன்று தானம்மா
நாமம்-ஒன்றைக் கூறி-வந்தால் த்யானம்-அது தானம்மா
முக்தி-தரும் வித்தையடி
 
*நான் = ஆன்மா
 
Comments