43. சீராகும் உந்தன்-நெஞ்சம்(ஆறோடும் மண்ணில் என்றும் நீரோடும்)

(#** ஆறோடும் மண்ணில் என்றும் நீரோடும்) (* இறை நாம மகிமை)

சீராகும் உந்தன்நெஞ்சம் நேராகும்
வேரோடு பாவம்சென்றே ஓடோடும்
(2)
போராட்டம் நெஞ்சில் இல்லை ஏமாற்றும் வஞ்சம் இல்லை
ஸ்ரீ ராம ராம என்றால்
சீராகும் உந்தன்நெஞ்சம் நேராகும்
வேரோடு பாவம்சென்றே ஓடோடும்
(MUSIC)
கையிலே சேவை கொண்டு வாயில்-ராமன் நாமம்-கொண்டு
உலகிலே வாழும் மாந்தர் தன்னைச் சென்று தேடிக் கொண்டு
நெஞ்சிலே நாமம்-நின்று ஆக்கும் அதனைத் தங்கம்-என்று
மோகமும் சென்றிவ்வுலகம் ஆகாதோ சொர்க்கம்-என்று
மேலான செல்வமும்-எது கூறாயோ
ஸ்ரீ ராமன் நாமச் செல்வம் போறாதோ
சீராகும் உந்தன்நெஞ்சம் நேராகும்
வேரோடு பாவம்சென்றே ஓடோடும்
(3)
போராட்டம் நெஞ்சில் இல்லை ஏமாற்றும் வஞ்சம் இல்லை
ஸ்ரீ ராம ராம என்றால்
சீராகும் உந்தன்நெஞ்சம் நேராகும்
வேரோடு பாவம்சென்றே ஓடோடும்
(MUSIC)
இச்சை கொல்ல வேறே வழி ஒன்று என்ன சொல்லம்மா (2)
*கர்வம் தந்த மாயம் போக்க நல்லுபாயம் என்னம்மா
நல்லுபாயம் என்னம்மா
நல்ல புத்தி சொல்லும்-வேதம் சொன்னதென்ன சொல்லம்மா
பிரிந்திடும் **காயம் தந்தஉணர்வுதன் நோயம்மா உணர்வுதன் நோயம்மா
போராட்டம் நெஞ்சில் இல்லை ஏமாற்றும் வஞ்சம் இல்லை
ஸ்ரீ ராம ராம என்றால்.. ரா..ம்..
சீராகும் உந்தன்நெஞ்சம் நேராகும்
வேரோடு பாவம்சென்றே ஓடோடும்
(MUSIC)
கைதட்டி நாமம்-சொல்லி கண்ணீர்-விட்டு உள்ளம்-கனிந்து
மெய்யுருகிச் சேவை-செய்தால் தந்தை-ராமன் காத்திருப்பான்
யார்-என்ன சொல்லிய-போதும் பேர்-என்ற ஒன்றே போதும் (2)
ராம்-என்ற இறைவன் பேரே பார்தன்னைக் காக்குது பாரீர்
பார்தன்னைக் காக்குது பாரீர்
போராட்டம் நெஞ்சில் இல்லை ஏமாற்றும் வஞ்சம் இல்லை
ஸ்ரீ ராம ராம என்றால்… ரா..ம்..
சீராகும் உந்தன்நெஞ்சம் நேராகும்
வேரோடு பாவம்சென்றே ஓடோடும்
போராட்டம் நெஞ்சில் இல்லை ஏமாற்றும் வஞ்சம் இல்லை
ஸ்ரீ ராம ராம என்றால்..
 
 
 
Ø *கர்வம் = Ego.. அறியாமை ** நான் உடல் என்னும் உணர்வு
 
 
 



Comments