(#**அனுபவம் புதுமை) (* ஆத்மாநுபவம்)
தனிமையின் இனிமை என்னிடம் கண்டேன்
எந்நாளும் இல்லாமல் அதனாலென் நெஞ்சத்திலே
ஆஹா சொல்லாலே முடியாது உண்டான ஆனந்தமே
வானோரும் காணா..திதானா
தனிமையின் இனிமை என்னிடம் கண்டேன்
எந்நாளும் இல்லாமல் அதனாலென் நெஞ்சத்திலே
சொல்லாலே முடியாது உண்டான ஆனந்தமே
வானோரும் காணா..திதானா
தனிமையின் இனிமை
(MUSIC)
சொன்னாலும் புரியாத அதுத்தனி அனுபவம் தான்
அஹா சொல்லாமல் கொள்ளாமல் இனித்திடும் அது-தீந்தேன்
உடல் கூடாய்ச் சென்றால் அது-கூடாதய்யா
வெறும் நானாய் நின்றால் புது ஆனந்தம் தான்
ஆனந்தம் தான்..
தனிமையின் இனிமை என்னிடம் கண்டேன்
எந்நாளும் இல்லாமல் அதனாலென் நெஞ்சத்திலே
சொல்லாலே முடியாது உண்டான ஆனந்தமே
வானோரும் காணாதிதானா
தனிமையின் இனிமை
(MUSIC)
கண்-மூடி உள்-சென்று உருகிடும் நிலை-கொண்டால்
அவன் முன்வந்து கண்தந்து மெய்-என்ற சுடரளிப்பான்
இரு பேராய் நின்றாய் அன்று ஒன்றே என்பாய்
ஒரு பேதம் இல்லை யாவும் நானே என்பாய்.. நானாய் நிற்பாய்
தனிமையின் இனிமை
(MUSIC)
அன்றோடு தொலையாதோ உனக்கந்த உடல்-எண்ணம்
ஆஹா சித்தாடும் உணர்வுதன் முழுதிலும் சிவன்-வண்ணம்
அவன் நானே-என்பாய் நான் எங்கே-என்பாய்
அவன் உன்னில்-வந்தால் நீ என்னில்-என்பாய் என்னில்-என்பாய்
தனியே இருப்பது சுயமாய் இருக்குதம்மா
அஹா பிழையால் பிரிந்தது அழகாய் இணைந்ததம்மா
ஒரு துக்கம் இல்லை ஒரு ஏக்கம் இல்லை
உடல் சாகும்-என ஒரு பயமும் இல்லை பயமும் இல்லை
தனிமையின் இனிமை என்னிடம் கண்டேன்
எந்நாளும் இல்லாமல் அதனாலென் நெஞ்சத்திலே
சொல்லாலே முடியாது உண்டான ஆனந்தமே
ஆஹாஹ..ஆஹாஹ..ஹாஹா
தனிமையின் இனிமை
Comments
Post a Comment