41. கண்ணன் காட்டிய வழியம்மா (அண்ணன் காட்டிய வழியம்மா)

(#**அண்ணன் காட்டிய வழியம்மா) (* கீதை)
 
கண்ணன் காட்டிய வழியம்மா
செயல் பலன்பால் விளைந்த துறவம்மா
கீதை வழியே கொடுத்ததம்மா
உயர் மெய்யே இதனுள் இருக்குதம்மா
கண்ணன் காட்டிய வழியம்மா
(MUSIC)
* கேட்டால்-கிடைப்பது வரமாகும் கேளாமல்-கொடுப்பது அருளாகும்
தெரிந்தே இருப்பது உலகாகும் அறியாமை மறைத்ததுன் நிஜமாகும்
கண்ணன் காட்டிய வழியம்மா(MUSIC)
நீசிவனே-என்றே இருந்திடுவாய் படைத்தவனே வந்து கொடுத்தணைப்பான்
தா-சிவனே என்று நீ-விழைந்தால் கேட்டதைத் தான்-அவன் கொடுத்துச் செல்வான்
கண்ணன் காட்டிய வழியம்மா
(MUSIC)
அவனை நினைத்தே செயல் புரிவாய் அவன் உன்னை நினைத்தே காத்திருப்பான்
இன்னும் எனக்கேன் புரியவில்லை அவன் கீதையைச் சொன்னதும் எனக்கு இல்லை
கண்ணன் காட்டிய வழியம்மா
செயல் பலன்பால் விளைந்த துறவம்மா
கீதை வழியே கொடுத்ததம்மா
உயர் மெய்யே இதனுள் இருக்குதம்மா
கண்ணன் காட்டிய வழியம்மா
 
 
 
Ø * God grants your wants,if you ask. But gives what you need, if you trust Him and don’t ask.






Comments