40. நெஞ்சே நீ இருக்கும் (அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்)




(#** அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்) (* மனம்)

நெஞ்சே நீ-இருக்கும் உலகத்திலே சுகமென்ன இருக்கு
உள்ளே *நான்-இருக்கும் இதயத்திலே ஆனந்தம்-இருக்கு
இறை-அருளால் எனக்கு-த்யானம் கூடிடும்போது
இன்று இருக்கும்-இப்பார் சுவடிலாமல் மறைந்திடும் பாரு
நெஞ்சே நீ-இருக்கும் உலகத்திலே சுகமென்ன-இருக்கு இடரொன்றே இருக்கு
(MUSIC)
** உலகம் என்று காண்பதவன் பாதி..யில்-பாதி
பெரும் ப்ரபஞ்சம்-என விரிந்து-வளரும் அவனின்-மீதி
மனது-என்ற போர்வையில் உனது தோற்றம் எண்ணமே
நாளை-நானும் த்யானம்-கொள்ள தோற்றிடுவாய் திண்ணமே
ஓடிடுவாய் முன்னமே
நெஞ்சே நீ-இருக்கும் உலகத்திலே சுகமென்ன இருக்கு
உள்ளே நான்-இருக்கும் இதயத்திலே ஆனந்தம் இருக்கு
(MUSIC)
நானிருக்கும் நிலைமையுமோர் நித்யமாகுமா
நான் த்யானம்-கொண்டால் தோன்றும்-சத்யம் அநித்யமாகுமா
அகந்தை கொண்ட நெஞ்சமே ஞானக் கண்ணை மறைப்பதா
உன்னை-உண்மை என்று-நம்பி பெற்ற-தாயை மறப்பதா
***உற்ற நோயில் மரிப்பதா
நெஞ்சே நீ-இருக்கும் உலகத்திலே சுகமென்ன இருக்கு இடரொன்றே இருக்கு
(MUSIC)
தோட்டம்-என்ற உலகில்-உயிரின் பயிரை-ஆண்டவன்
ஒரு கேளிக்கைக்குப் படைத்துத்-தானே பார்த்து ரசிக்கிறான்
நாமுலகில் வசிக்கணும் நாடகத்தை ரசிக்கணும்
***உலகில் கரத்தை அவனில்-சிரத்தை வைத்து நாமும் இருந்திடணும்
பிறகு அவனில் கலந்திடணும்


Ø * நான்=ஆன்மா, ** புருஷஸுக்தம்-(3-4)- Material World and the life within is 25% and rest is 75% of GOD.

Ø ** Perform your duty in the world un-attached by keeping Him in the head(சித்தம்)- உன் கரம் நாட்டில் , உன் சிரம் காட்டில் எனத் துறவு மனப்பான்மையுடன் செயல்படு. 

** சிரத்தை = ச்ரத்தை 
கைகளில் சேவையையும் இறைவனிடத்தில் நினைப்பையும் (ச்ரத்தையுடன் கூடிய பக்த்தியையும்) வைக்க வேண்டும் 

*** உற்ற நோய் = அறியாமை

Comments