39. ஓய்ந்திடாமல் (ஆயர் பாடி மாளிகையில்- க்ருஷ்ணகானம்)

 
 
(#** ஆயர் பாடி மாளிகையில்) (* க்ருஷ்ண கானம் ) (* மனம்)
 
 
ஓய்ந்திடாமல் ஓரிடத்தில் நின்றிடாமல் எக்கணமும்
ஆடும் நெஞ்சே உன்-அலைச்சல் ஏன் தானோ
(1+Short Music+1)
நீ மெய்யெனவே உலகைக்-கொண்டு அதனின்-பின்னால் ஆடிய-பின்
மெய் யுணரா நிலைமையும்-தான் ஏன் ஏனோ
மெய் யுணரா நிலைமை அந்தோ ஏன் தானோ
ஓய்ந்திடாமல் ஓரிடத்தில் நின்றிடாமல் எக்கணமும்
ஆடும் நெஞ்சே உன்-அலைச்சல் ஏன் தானோ
(MUSIC)
மின்னலென கோபி-என்னும் சந்தனத்தின் திலகம்-மின்னும்
கண்ணபிரான் அடி-பணிந்து ஓயாயோ
(2)
அந்த இரவினிலே உலகடங்க தூக்கம் கொண்டே உயிர் மயங்க
அடங்கிடாமல் உலவும் நீயும் பேய் தானோ
இரவினிலும் அலையும் நீயும் பேய் தானோ
ஓய்ந்திடாமல் ஓரிடத்தில் நின்றிடாமல் எக்கணமும்
ஆடும் நெஞ்சே உன்-அலைச்சல் ஏன் தானோ
(MUSIC)
நாகப்-படம் என்று- எந்தன் குண்டலினி எழும்பிட-நீ
அடங்கிடணும் ஒடுங்கிடணும் ஓயாயோ
(2)
என் யோக-நிலை கூடலுக்கும் மோன-விளை..யாடலுக்கும்
நீ-ஒடுங்க வேண்டுமடா ஓயாயோ
நீ அடங்கி எனக்குதவி செய்யாயோ
ஓய்ந்திடாமல் ஓரிடத்தில் நின்றிடாமல் எக்கணமும்
ஆடும் நெஞ்சே உன்-அலைச்சல் ஏன் தானோ
(MUSIC)
கண்ணே-நீ அடங்கிடுவாய் பொன்னே-சொல் கேட்டிடுவாய்
உன்னடிமை வேண்டுதலைக் கேளாயோ
(2)
நான் பரமனடி காண்பதற்கும் அருளமுதம் கொள்வதற்கும்
நீ இருந்தால் ஆகாது போ போ போ ...
எண்ணங்களின் கடலலையே ஓயாயோ
ஓய்ந்திடாமல் ஓரிடத்தில் நின்றிடாமல் எக்கணமும்
ஆடும் நெஞ்சே உன்-அலைச்சல் ஏன் தானோ (2)
 

Comments