38. போதனையாய்த் தானே(கோதையின் திருப்பாவை)

 
(#** கோதையின் திருப்பாவை) (* க்ருஷ்ண கானம் )

கண்ணா கண்ணாகண்ணா கண்…ணா..!
(SM)
போதனை..யாய்த்-தானே வேதனை..யைத்-தானே
ஏற்றிட..வே-மனித வடிவில் வந்தாய்(2)
கள்ளனென்..றொரு-ஏச்சு கண்ணனுக்..கென-ஆச்சு
அதை உவந்..தே-சிறையில் பிறந்தே வந்தாய் (2)
போதனையாய்த் தானே வேதனையைத் தானே
ஏற்றிட..வே-மனித வடிவில் வந்தாய்
(MUSIC)
காரணம் புரியாமல் சோகத்தின் வடிவாக
போர் புரி..யேன்-என்று பார்த்தன் சொன்னான்
நான் புரி..யேன்-என்று பார்த்தன் சொன்னான்
தூற்றுதல் என்பேரில் பாரத்தை என் தோளில் (2)
போட்டு நீ செய் போரை பார்த்தா என்றாய்
பொறுப்பினை நீ ஏற்று நின்றாய் கண்ணா
(MUSIC)
கெளரவ..ரும்-போரில் அழிந்திட காந்தாரி
காரணம் நீ என்று உன்னைச் சொன்னாள்
சாபத்தினால் உன்னை அன்றே கொன்றாள்
தாயெனக் காத்த-நீ தாய்-வலி பார்த்த-நீ (2)
உன்-முடி சாய்த்ததை ஏற்றாய்-கண்ணா
உன்-முடிவேற்..றனை அய்யோ-கண்ணா
(MUSIC)
கர்ணனும் மெய்-சோர குந்தியின் மடி-சாய
காரணம் நீ-என்று உன்னைச் சொன்னார்
பாண்டவ..ரும்-உன்னைப் பழித்தே சொன்னார்
உன் முகம் பார்த்திட பூவெனப் பூத்திட
புன்னகை ஒளி-சிந்தி நின்றாய்-கண்ணா
அப்பழி..யும்-ஏற்றுக் கொண்டாய் கண்ணா
(MUSIC)
சேவை செய்தே-களைத்து பாரினில் மெய் நொந்து
மெய்-படுத்தே கொஞ்சம் ஓய்ந்தாய் கண்ணா
ஓய்வெடுத்தே துயில் கொண்டாய் கண்ணா
தாளினை வேட்டுவன் மானென்று எண்ணினன் (2)
கொன்று விட்டான் உன்னை ஐயோ அம்பால்
கொண்டு விட்டாய் எந்த பழியும் உன் பால்
போதனை..யாய்த் தானே வேதனை..யைத் தானே
ஏற்றிட..வே-மனித வடிவில் வந்தாய் (2)
கள்ளனென்றொரு ஏச்சு கண்ணனுக்கென ஆச்சு
அதை-உவந்..தே-சிறையில் பிறந்தே வந்தாய்
பழிகளை..யே-கொள்ள பிறந்தே வந்தாய்


 


Comments