37. பூவுலகில் மனிதரெல்லாம் (கோகுலத்தில் பசுக்களெல்லாம்)


(#** கோகுலத்தில் பசுக்களெல்லாம்) (* க்ருஷ்ண கானம் )

பூவுலகில் மனிதரெல்லாம் எந்நாளும் நேரமில்லை என்பது-ஓர் விந்தையடி என்-தோழி
(1+Short Music+1)
அவர் கோவிந்தனைக் கூப்பிட-ஓர் கணமில்லாமல் சேர்த்த பணம் பெட்டியிலே மக்குதடி என்-தோழி
(2)
கேள் தோழி இதைக் கேள் தோழி
விந்தையைப் பார் தோழி நீ பார் தோழி
(MUSIC)
ஓடி தினம் ஆசையினால் கோடிப் பணம் சேர்த்த பின்னால்
மனதில் துளியும் த்ருப்தி-இல்லை பார் தோழி
(2)
அவர் மனங்களிலே துருப்பிடித்து இருளடைந்து கறுத்த பின்னால்
(1+Music+1)
பொன்னதற்கும் மெருகிடுமோ சொல் தோழி
சொல் தோழி நீ சொல் தோழி
விந்தையைப் பார் தோழி நீ பார் தோழி
பூவுலகில் மனிதரெல்லாம் எந்நாளும் நேரமில்லை என்பது ஓர் விந்தையடி என் தோழி
(MUSIC)
குழந்தையாக இருக்கையிலே குறையாத மகிழ்ச்சி ஒன்றால்
அவரின் மனது நிறைந்திருந்தது பார் தோழி
(2)
பாரில் வளர்ந்தபிறகு அவர்-மனதில் மகிழ்வுண்டா என்று-கேட்டால்
(1+SM+1)
மௌனம் தானே பதிலளிக்குது என் தோழி
என் தோழி அடி என் தோழி (2)
(MUSIC)
படிப்பறியா முன்னோரெல்லாம் பக்தி-செய்தார் துடிமடியாய்
அவர்-முகத்தில் சாந்தி-மின்னுது என்தோழி
(2)
அட படித்ததனால் வந்த-கனம் தலையில்-வந்து சேர்ந்ததனால்
(1+Short Music+1)
வேறெதற்கும் நேரமில்லடி என்-தோழி
நேரத்துக்கே நேரமில்லடி என்-தோழி

பூவுலகில் மனிதரெல்லாம் எந்நாளும் நேரமில்லை என்பது ஓர் விந்தையடி என் தோழி
அவர் கோவிந்தனைக் கூப்பிட ஓர் கணமில்லாமல் சேர்த்த பணம் பெட்டியிலே மக்குதடி என் தோழி
கேள் தோழி இதைக் கேள் தோழி
விந்தையைப் பார் தோழி நீ பார் தோழி

 

Comments