35. எல்லாம் தரும்(புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே-க்ருஷ்ண கானம்)

(#** புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே) (* க்ருஷ்ண கானம் )
(* கீதை, * பஜகோவிந்தம் )

எல்லாம் தரும் அந்த கீதை தனில்
ஒரு சிறிதாகி..லும்-கற்றுத் தேறுங்களேன்

(2)
பாய்ந்தோடும் கங்கை அலை நீர் தன்னிலே
ஒரு துளியேனும் வாய் பருகிப் பாருங்களேன்
(2)
எல்லாம் தரும் அந்த கீதை தனில் ஒரு சிறிதாகி..லும்-கற்றுத் தேறுங்களேன்
(MUSIC)
குருவாம்-சங்..கரர்-திரு வாக்கே இது
பஜ கோவிந்தம் நம்-போன்ற பேர்க்கே இது
(2)
என்றேனும் நன்மை தரும் என்றே அதை
இன்று சிறிதேனும் வாழ்வில் கொள்ளப் பாருங்களேன் (2)

எல்லாம் தரும் அந்த கீதை தனில் ஒரு சிறிதாகி..லும்-கற்றுத் தேறுங்களேன் (MUSIC)
குருக்ஷேத்ரப் போரில்-அன்று ஒரு-அர்ஜுனன்
இன்று கலி-யோடு இருக்கின்ற பல-அர்ஜுனர்
(2)
என-ஊர்க்கு கண்ணன் தந்த உரை-என்பதே
அந்த கீதம்ருதம் அள்ளி உண்ணுங்களேன் (2)

எல்லாம் தரும் அந்த கீதை தனில் ஒரு சிறிதாகி..லும்-கற்றுத் தேறுங்களேன்
(MUSIC)
கலங்காதே மயங்காதே என்றே உரைத்தான்
இந்த பாரில..றம்-தழைக்க வருவேனே என்றான்
(2)
பாருள்ளோர்க்கு ப்ரேமை-என்ற அன்பைக் கொடுத்தான்
தான் நடிப்பதற்கு மனித-ரூபம் தன்னை எடுத்தான் (2)
எல்லாம் தரும் அந்த கீதை தனில் ஒரு சிறிதாகி..லும்-கற்றுத் தேறுங்களேன்
பாய்ந்தோடும் கங்கை அலை நீர் தன்னிலே
ஒரு துளியேனும் வாய்-பருகிப் பாருங்களேன்
எல்லாம் தரும் அந்த கீதை தனில் ஒரு சிறிதாகி..லும்-கற்றுத் தேறுங்களேன்

Comments