(#** அம்மானை அழகு மிகும் பெண்மானை) (* வேதம்)
அய்யா கேள் அழகு-மிகு அம்மா-கேள் (2)
ஆடி வரும் பையா கேள்
வேதம்தரும் உண்மை கேள் (2)
(SM)
நம்பிய பேருக்கு போதனை
அழகாய்த்-தரும் அதன் பெயர் வேதமாம்
(2)
உன்னுடல் மாய்த்திடும் சாவெனும்
ஓர் சாபமுன் ஆன்மத்துக் கில்லையே
(2)
அய்யா கேள் அழகு-மிகு அம்மா கேள் ஆடிவரும் பையா கேள்
வேதம்தரும் உண்மை கேள் (2)
(MUSIC)
யாவிலும் ஒளி விடும் சுடரென
உயிர் உள்ளினுள் ஒளிர்ந்திடும் ஆத்துமம்
(2)
நீரினில் மறைந்துள்ள நெருப்பென
உன் ஆசையில் மறைந்துள..தாம்-அதும்
(2)
உண்மையை நான்-மறை சாத்திரம்
தன் உணர்விழைவோருக்கு மாத்திரம்
(2)
தந்திடுமாம் நல்ல பாத்திரம்
என மாறிடக் கொள்-உத் வேகமும்
(2)
(2)
அய்யா-கேள் அழகு-மிகு அம்மா கேள் ஆடிவரும் பையா கேள்
வேதம்தரும் உண்மை கேள் (2)
(MUSIC)
பொன்னிற மாய்-ஒளி தோன்றிட
வெகு..வாய்-இனிக்..கும்-அமு..தூறிட
உன்னிடம் த்யானமும் கூடிட
பெரும் ஏக்கத்தை உன்னிடம் கொண்டிடு
பொன் பொருள் சடங்குகள் அதற்கிலை
பெரும் மந்திர யாகங்கள் அதற்கிலை
வேண்டுவ தன்பெனும் சாதனை
வேறு தேவையில்லை ஏதும் அதற்கென
அய்யா கேள் அழகு-மிகு அம்மா கேள் ஆடிவரும் பையா கேள்
வேதம்தரும் உண்மை கேள் வேதம்தரும் உண்மை கேள்..!
Comments
Post a Comment