27. உந்தன் மொழியே கீதை(முத்து நகையே)

(#** முத்து நகையே உன்னை நான் அறிவேன்)
( * கீதை )

உந்தன் மொழியே கீதை நானறிவேன்..கண்ணா.. கண்ணா
கீதை வழியே பாதை நீ உரைத்தாய் உண்மை தனைக் கொடுத்தாய்
(1+Short Music+1+ Short Music)
நிலவும் வானும் நிலமும் நீரும் உன்னிருந்து வந்ததல்லவோ
நீயும் அதனைச் சொன்னதன் பிறகும் எந்தன்நெஞ்சில் ஐயம்எழுமோ
உந்தன் மொழியே கீதை நானறிவேன்..கண்ணா.. கண்ணா
(MUSIC)
நான் மறையைத் தேனாய் நீ கொடுத்தாய்
சத்தியத்தை நன்றாய் நீ உரைத்தாய்
(2)
என் மனதில் ஆழ இடம் பிடித்தாய்
எழடா என நீ அதில் உரைத்தாய்
உந்தன் மொழியே கீதை நானறிவேன்..கண்ணா.. கண்ணா
கீதை வழியே பாதை நீ உரைத்தாய் உண்மை தனைக் கொடுத்தாய்
(MUSIC)
பொங்கி- அழும் பார்த்தா துயர்-எதற்கு -
கர்மம்- புரி பார்த்தா வில்- எடுத்து
(2)
கர்மப் பலன் பார்த்தா.. + (Short Music)
கர்மப் பலன் பார்த்தா நீ-எனக்குத் தருவாய் எனும் உரை பாரினுக்கு (2)
(Short Music)
உந்தன் மொழியே கீதை நானறிவேன்..கண்ணா.. கண்ணா
கீதை-வழியே பாதை நீ உரைத்தாய் உண்மை தனைக் கொடுத்தாய்

Comments