26. ஏ-மனமே ஏ-மனமே (ஏனழுதாய்.. ஏனழுதாய்)

 
 
 
(#** ஏனழுதாய்.. ஏனழுதாய்.. என்னுயிரே ஏனழுதாய் )
(* மனம்)

ஏ-மனமே ஏ-மனமே கொஞ்சம்-அடங்கு என்-மனமே
கணமும்-அலைந்து திரிவதற்கு உனக்கு-ஏது இவ்..வுரமே
(2)
ஏ-மனமே ஏ-மனமே அடங்கிடுவாய் என்-மனமே
(MUSIC)
நீ-யடங்க மறுப்பதனால் நான்அடங்கி நடந்திடுவேன் (2)
என்று-உன்னில் நினைப்பிருந்தால் அது இனிமேல் நடக்காதம்மா
ஏ-மனமே ஏ-மனமே அடங்கிடுவாய் என்-மனமே
(MUSIC)
என்னை-யன்றி நீயுமில்லை உனக்கு-உயிர் என்று-இல்லை (2)
இந்த-சிறு உண்மை கூட அறியும்-திறம் உனக்கில்லையே

த்யானம்-கொண்டால் அடங்கிவிடும்
பார் உனக்கு-கொட்டம் அடங்கிவிடும்
(2)
நான் தொடர்ந்து முயலும்போது எனக்கும்-கூட கூடிவரும்
ஏ-மனமே ஏ-மனமே அடங்கிடுவாய் என்-மனமே
கணமும்-அலைந்து திரிவதற்கு உனக்கு-ஏது-இவ்..வுரமே
ஏ-மனமே ஏ-மனமே அடங்கிடுவாய் என்-மனமே
 
 
 
________________
 

Comments