(* இறைஞ்சல்/இறை கெஞ்சல் )
தில்லை பெருமானே சித்தர்களின் கோனே (2)
உய்ய வழி காட்டிடய்யா பெம்மானே (2)
தில்லை பெருமானே சித்தர்களின் கோனே
(MUSIC)
என் மனதின் கோதை நீக்கிவிடுவாயே (2)
உன்னருளால் ஆக்கு-அதை முன் போலே (2)
தில்லை பெருமானே சித்தர்களின் கோனே
(MUSIC)
என்னிலுனைக் காணப் பெம்மானே ..
என்னிலுனைக் காணப் பெம்மானே மாயையைத் தானே
சென்று விடச் செய்திடுவாய் உன்னருளாலே
மின்னல் ஒளி ஆடிடுமாமே கண்ணின் முன்னாலே.. ஏ..
மின்னல் ஒளி ஆடிடுமாமே கண்ணின் முன்னாலே
மின்னல் ஒளி ஆடிடுமாமே கண்ணின் முன்னாலே
அந்த வழி காட்டிடைய்யா ஹே சித்தர் கோனே (2)
ஆ..ஆ..
தில்லை பெருமானே சித்தர்களின் கோனே
(MUSIC)
உன்னருளின் மகுடி முன்னாலே நாகத்தைப் போலே..ஆ..ஆ..
உன்னருளின் மகுடி முன்னாலே நாகத்தைப் போலே
குண்டலினி எழும்பச் செய்யென் த்யானத்தினாலே (2)
சிந்தை ஒழிந்தோடிடத் தானே த்யானம் செய்தேனே (2)
உந்தன்-பதம் விளங்கச்-செய்யேன் என்..னை-உன் போலே
ஆ..ஆ..
தில்லை பெருமானே சித்தர்களின் கோனே
ஆ..ஆ..
Comments
Post a Comment