9. சோற்றில் வளர் உன்னுடலும் (மூன்று தமிழ் தோன்றியதும்)


(#** மூன்று தமிழ் தோன்றியதும்)
* ஆன்ம ஞானம், * காயமே இது பொய்யடா )


சோற்றில்-வளர் மெய்யுடலுன் மெய்யுருவோ (2)
நீ-மறந்தாலும் உண்மைதான் மறைந்திடுமோ (2)
நான்கு-மறை சொல்லிடும்-மெய் மெய்யுடலோ
அது-அழியாதே என்பதென்ன பொய்-மடலோ
(2)
அது-அழியாதே என்பதென்ன பொய்-மடலோ..பொய்-மடலோ
நான்கு-மறை சொல்லிடும்-மெய் மெய்யுடலோ
(MUSIC)
ஸ்புரித்ததைத்-தான் சொல்லி வைத்தார் ரிஷி முனிகள்
நாம் உய்ந்திட-மேல் ஏறிச்-செல்ல அவை படிகள்
(2) 
அதைப் போலே நாம் செய்வோம் சாதனையும்
அதன் வழியாலே விலக்கிடுவோம் மாயமலம் .. மாயமலம்
சோற்றில்-வளர் மெய்யுடலுன் மெய்யுருவோ
நீ-மறந்தாலும் உண்மைதான் மறைந்திடுமோ மறைந்திடுமோ
(MUSIC)
பனிமலையில் மட்டுமில்லை சிவ-வடிவம்
அந்த கோவில்-தனில் மட்டுமில்லை இறைவடிவம்
(2)
உனது-மனம் அல்ல-உந்தன் மெய்வடிவம்
அதைக் கடந்திருக்கும் சித்தமில்லை உன்-வடிவம் (2)
மெய்வடிவம்
சோற்றில்-வளர் மெய்யுடலுன் மெய்யுருவோ
(MUSIC)
*பெருவிரலாய் இருப்பதுதான் அதன் அளவாம்
அதன் இடம்-தோன்றும் குளிர்-நிலவாய்ப் பெரும்-ஒளியாம்
(2)
இதயம்-தான் அது-இருக்கும் இடமதுவாம்
அதை அன்புருவாய்ச் சொல்லும் மொழி **காதையுமாம்
நான்கு மறை சொல்லிடும்-மெய் மெய்யுடலோ
அது அழியாதே என்பதென்ன பொய்-மடலோ (2)
பொய்-மடலோ
சோற்றில்-வளர் உன்னுடலும் மெய்யுருவோ
நீ மறந்தாலும் உண்மைதான் மறைந்திடுமோ (2)
மறைந்திடுமோ
Ø ** காதை-கதோபநிஷத் (1.2.20) - ஆன்மா கை கட்டை விரல் ப்ரமாணம் என்கிறது


 

Comments