(#** அம்மாடி பொண்ணுக்குத் தங்க மனசு) (* இறை கூடல்)
அம்மாடி என்றைக்கு நெஞ்சத் தெளிவு..என்றைக்கு உந்தன் உறவு
என்றைக்குத் துன்ப முடிவு ..ஆஹா அன்றைக்கு எந்தன் விடிவு
அன்றைக்கு எந்தன் விடிவு
(2)
ஓஹோஹோ ..ஓ.. ஓ
என்னையும்-உன்னிடம் இழுத்து
நீ தந்ததோ மண்ணிடம் வெறுப்பு
(1+Short Jathi + 1)
என்னையும்-உன்னிடம் இழுத்து
நீ தந்ததோ மண்ணிடம் வெறுப்பு
(1+Short Jathi + 1)
என்னமோ உன்னிடம் இருக்கு
மண்ணின் மேலோர் சுகமும் இருக்கு
மண்ணின் மேலோர் சுகமும் இருக்கு
யாருக்கு உன்-முழுது புரியும்
பூமிக்கு என்று-அது தெரியும்
பூவாலே நாருக்குண்டு சிறப்பும்
உன்னாலே தான்-எனக்கும் பிறப்பும்
பூமிக்கு என்று-அது தெரியும்
பூவாலே நாருக்குண்டு சிறப்பும்
உன்னாலே தான்-எனக்கும் பிறப்பும்
அம்மாடி என்றைக்கு நெஞ்சத் தெளிவு..என்றைக்கு உந்தன் உறவு
என்றைக்குத் துன்ப முடிவு ..ஆஹா அன்றைக்கு எந்தன் விடிவு
அன்றைக்கு எந்தன் விடிவு
(MUSIC)
*அடித்தான் மதுரையில் ஒரு நாள்
யாரும் துடித்தார் பாரினில் அந்நாள்
(1+Short Jathi + 1)
தனியாய் வேறொன்றும் இல்லை
(1+Short Jathi + 1)
தனியாய் வேறொன்றும் இல்லை
என உரைத்தாய் அழகாய் உண்மை
அன்றைக்கு உந்தன் **திரு ஆட்டம்
தந்ததே மண்ணில் இறை நாட்டம்
என்றைக்குச் செல்லும் எந்தன் மூட்டம்
அன்றைக்குச் செல்லும் தானே வாட்டம்
அன்றைக்கு உந்தன் **திரு ஆட்டம்
தந்ததே மண்ணில் இறை நாட்டம்
என்றைக்குச் செல்லும் எந்தன் மூட்டம்
அன்றைக்குச் செல்லும் தானே வாட்டம்
அம்மாடி என்றைக்கு நெஞ்சத் தெளிவு..என்றைக்கு உந்தன் உறவு
என்றைக்குத் துன்ப முடிவு ..ஆஹா அன்றைக்கு எந்தன் விடிவு
அன்றைக்கு எந்தன் விடிவு
_______________
Ø * பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட திருவிளையாடல் நிகழ்ச்சி (Click here for the story)
Ø ** திரு ஆட்டம் = திரு விளையாடல்
Comments
Post a Comment