5. ஐயஹோ செல்வம் ஒன்றை நம்பி ((அம்மம்மா தம்பி-என்று)



(#** அம்மம்மா தம்பி என்று நம்பி ) ( * பொருள் தேடல்)




ஐயஹோ செல்வம்-ஒன்றை நம்பி நான்-மண்ணில் இருந்தேன்
(1+Short Music+1)
பேயென்ற..லைந்து பொன்-பொ..ருள்-சம்பாதித்தேன் (2)
நான் உணராமல் வாழ்ந்த மூடன் அல்லவோ
உண்மை உணராமல் வாழ்ந்த மூடன் அல்லவோ
ஐயஹோ செல்வம்-ஒன்றை நம்பி நான்-மண்ணில் இருந்தேன்
(MUSIC)
பொய்யை உண்மை என்றிருந்தேன்
மாலடியை நான் மறந்தேன்
வந்திடுமோ எந்தனுக்கோர் பீடு
பெரும் சொந்தமென்று பந்தம் கொண்டு
பொன்போருளைச் சேர்த்துவந்தேன்
தந்திடுமா அது-மறுமை வீடு
(Short Music)
ராம-நாடகத்தில் அன்று-நீ உரைத்த உண்மையை மறந்தேனே
பின்பு பாரதத்தில் நின்று நீ-உரைத்த கீதையும் அது-போலே
(2)
இனி நான்-உயரும் அந்த-நாள் வருமா (2)
எந்தன் ஆன்மாவின் வேஷம்-போய் மெய்-வி..ளங்கவே
உன் பதம்-காணும் மோக்ஷத்தை தந்தருள் நீயே
ஐயஹோ செல்வம்-ஒன்றை நம்பி நான்-மண்ணில் இருந்தேன்
(MUSIC)
அன்றைக்கு-நீ உலகில்-வந்து உண்மையினைத் தான்-உரைத்துச்
சென்றதுக்கு-கீதையுமே சாட்சி …
அதில் சொன்னபடி நடக்க-இனி நீஅருளு என்று-அடி
வந்த-எனைக் காத்தருளு ஸ்வாமி..
(Short Music)
பொன்னில் பொருளில்-இலை உண்மை அதனில்-இலை என்றே புரிகிறது
எனினும் நாயின்-மனம் மீண்டும் மீண்டும்-குப்பை மேடே-சேர்கிறது
(2)
அது போவதன்றோ நான் மீள்வதென்றோ (2)
எது..வானாலும் நானும்-உந்தன் பிள்ளையல்லவோ
என்னைப் பாதுகாத்தல் தந்தை-உன்-க..டமை-அல்லவோ
ஐயஹோ செல்வம்-ஒன்றை நம்பி நான்-மண்ணில் இருந்தேன்
பேயென்ற..லைந்து பொன்-பொ..ருள்-சம்பாதித்தேன்
நான் உணராமல் வாழ்ந்த மூடன் அல்லவோ
உண்மை உணராமல் வாழ்ந்த மூடன் அல்லவோ
ஐயஹோ செல்வம்-ஒன்றை நம்பி நான்-மண்ணில் இருந்தேன்

 

Comments