4. அம்மம்மா உண்மை-என்று ஊனை(அம்மம்மா தம்பி-என்று நம்பி)


Click here to listen to the original Song

(#** அம்மம்மா தம்பி என்று நம்பி ) (* உடல் உணர்வு)

(Train Song..sung by small boy)
ஒன்றே யாவரும் என்னும் வார்த்தைகளால் ஞானத்தை
நன்றாகச் சொல்கிறதே நான்-உணரா நான் மறைகள்
உண்மை விளங்காமல் எதுவரையில் இருப்பேனோ
_____________________________
அம்மம்மா உண்மை-என்று ஊனை நான்-நம்பி இருந்தேன் (2)
நாள் தோறும் அதைப்-பேண கர்மம் புரிந்தேன் (2)
நான் அறியாமல் வாழ்ந்த மூடன் அல்லவோ
அம்மம்மா உண்மை-என்று ஊனை நான்-நம்பி இருந்தேன்
(MUSIC)
மலை-போல எனதூனை நினைக்கின்ற-எனக்கு
ஒரு-நாளும் புரியாது இறையோட கணக்கு
(1+Short Music+1)
தெய்வங்கள் மகிழ்கின்ற நல்-பூஜை என்று
சேவைகள் செய்வாய் என வேதம் உரைக்கும்
இதை உணரா-என் வாழ்க்கையும் வீணே ஐயஹோ
அம்மம்மா உண்மை-என்று ஊனை நான்-நம்பி இருந்தேன்
(MUSIC)
பலகோடி சேர்த்திங்கு மண்ணான வீடு
பல சேர்த்து மறந்தேனே பொன்னான வீடு
(2)
என் நெஞ்சில் அழுக்காறு பொல்லாங்கின் கேடு
சென்றோடும் அந்நாளே நன்மையல்லவோ
நான் ஒன்றாகும் அந்நாளும் என்றோ ஐயஹோ
அம்மம்மா உண்மை-என்று ஊனை நான்-நம்பி இருந்தேன்
நாள் தோறும் அதைப்-பேண கர்மம் புரிந்தேன்
(Short Music)
அம்மம்மா உண்மை-என்று ஊனை நான்-நம்பி இருந்தேன்

Comments