3. அகந்தை போக்க (அமைதியான நதியினிலே)



(#** அமைதியான நதியினிலே) (* அகந்தை)



* அகந்தை போக்க அகந்தை கொண்டே நாளும்
முயலும் அந்நிலை-தான் அறியாமை போலும்
(2)
பார்ப்பதுவும் கேட்பதுவும் அகந்தைதன்னால் எனநினைக்கும் (2)
அதையும்-அறி..யாமை-என்றே கூறும் வேதம்
அகந்தை போக்க அகந்தை கொண்டே நாளும்
முயலும் அந்நிலை-தான் அறியாமை போலும்
(MUSIC)

கட்டை விரல் அளவினிலே…
**கட்டை விரல் அளவினிலே தானாக விளங்குவது (2)
ஜீவன்-அந்த இதயமதில் உபநிடதம் சொல்கிறது
ஜீவன் என்றும் விளங்குவது என-வேதம் சொல்கிறது
அகந்தை போக்க அகந்தை கொண்டே நாளும்
முயலும் அந்நிலை-தான் அறியாமை போலும்
ஓ...(MUSIC)

பார்த்திருக்கும் சாட்சியதே வாழ்ந்திருக்கும் மாட்சியதே (2)
ஊன் மடிந்தால் சாவதில்லை மடிந்ததுவும் வீழ்வதில்லை (2)
*
அகந்தை போக்க அகந்தை கொண்டே நாளும்
முயலும் அந்நிலை-தான் அறியாமை போலும்
(2)
குண்டலினி என-இருக்கும் சொந்த-சக்தி உறங்கி வரும் (2)
***தண்டில்-அது எழும்பிவிட்டால் உன்னகந்தை விலகிவிடும்
குண்டலினி எழும்பிவிட்டால் உந்தன்நிலை விளங்கி விடும்
அகந்தை போக்க அகந்தை கொண்டே நாளும்
முயலும் அந்நிலை-தான் அறியாமை போலும்
(MUSIC)
அந்த நிலை கொண்டு தரும் சாதனை என்ற-பெரும் (2)
யோகமதைப் பூண்டு விட்டால் உந்தன் நிலை மாறிவிடும்
யோகமதைப் பூண்டு விட்டால் சொந்த நிலை கூடி வரும்
அகந்தை போக்க அகந்தை கொண்டே நாளும்
முயலும் அந்நிலை-தான் அறியாமை போலும்
(2)
பார்ப்பதுவும் கேட்பதுவும் அகந்தை-தன்னால் என-நினைக்கும் (2)
அதையும்-அறி..யாமை-என்றே கூறும் வேதம்

அகந்தை போக்க அகந்தை கொண்டே நாளும்
முயலும் அந்நிலை-தான் அறியாமை போலும்

__________________________

Ø * அகந்தை போக்க வேண்டும் என்று முயற்சியில் செயல் படுகின்ற போது. அந்த முயற்சியை நமக்கிருக்கும் அகந்தை தான் செயல்படுத்துகிறது.என்னே விந்தை…! எப்படி அகந்தை தன்னை விலக்கி தன்னை விலக்கச் செயல்பட முடியும். அது தன்னைத் தானே ஒருவன் தன் கையால் தூக்க முயல்வது போலாம். ஜீவாத்மா ,அகந்தை (Ego) இன்றி ஒரு செயலையும் செய்ய இயலாது. அகந்தை இல்லையேல் செயல் இல்லை. அகந்தை என்று நாம் சொல்வது ஜீவாத்மா , பரமாத்மாவினின்று தனிப்பட்டதே என்னும் எண்ணமேயன்றி வேறெதுவும் இல்லை. அகந்தையை விலக்குவது என்பது ,அகந்தை என்பது எது? உண்மையில் நான் என்பது எது? என்று உள் நோக்கிப் பார்த்தலே. அங்கு அகந்தை விலகி ஆன்ம தத்துவம் சுடர் விட்டுத் தானாக விளங்கும். இவ்வாறான சாதனையின் முடிவில் , அகந்தை என்பது பிறந்த இடத்திலே ஒடுங்கி, தன்-மயமான ஆன்மா ஒன்றே ஒளிரும். இது தான் அகந்தை விலக்குவது என்பது. எனவே ஆத்ம ஞானம் என்பது உணர வேண்டுவதாகும், அடைய வேண்டுவதல்ல.அடைதல் என்று சொன்னால் நம்மினும் தனித்த ஏதோ ஒன்று இருத்தலே பொருள். அப்படி ஏதும் இல்லையே. இருப்பதெல்லாம் ஒன்றே அந்த ஒன்றன் உணர்வினில் கலப்பதே முக்தி. (ஆம்.. ஒரே கண்கட்டு வித்தையாகத் தான் இருக்கிறது.. ஞானக் கண் திறக்கும் வித்தையும் கூட ஊனக் கண் கட்டும் வித்தை தான்..!)

Ø ** கதோபநிஷத் (1.2.20) - ஆன்மா கை கட்டை விரல் ப்ரமாணம் என்கிறது
Ø *** தண்டு வடம்

Comments