2. நூற்றுக்கு நூறெடுத்தே (பாட்டுக்குப் பாட்டெடுத்து)



( ஏட்டுக் கல்வி உண்மை கல்வி)
நூற்றுக்கு நூறெடுத்தே நான் ஏட்டுச்-சுரை படித்தேனே.. ஓய்
எள்ளளவும் பயனில்லையே அதுவோ இவ்வுலகு வரை-தானே
(2)  + (Short Music)
*ஏட்டுக் கல்வி இங்கிருக்க ஓம் ஞானக்-கல்வி அங்கிருக்க  (2)
எந்தன்சிறு மதியினிலே ஐயோ கொஞ்சமிது உரைக்கலையே (2)
ஏட்டுக் கல்வி இங்கிருக்க ஞானக்-கல்வி அங்கிருக்க
எந்தன் சிறு மதியினிலே ஐயோ கொஞ்சமிது உரைக்கலையே
(MUSIC)
உலகியலும் இலவாக அதைக் காக்கும் கிளியாக
பூமியிலே நான்-படிச்சேன் இரவெல்லாம் கண்முழிச்சு
உதவாத பட்டத்திலே என்-மனசில் ஆசை-வெச்சேன்
தங்க-மெடல் பின்னாலே திட்டமிட்டு போனேனே
திட்டமிட்டு போனேனே ஆ..ஓஓஓ..மூடனைப்-போல் ஆனேனே
ஊரெங்கும் தூங்கையிலே நான் கண்முழிச்சு பேயெனவே
**அன்றைக்கெனக்..குதவாத ஓர்-வீண்-படிப்பு படித்தேனே
(MUSIC)
என்னடா வாழ்க்கையிது … ஏனடா வாழ்வெனக்கு
என்று-நான் நினைப்போடு நெஞ்சத்திலே சலிப்போடு
நானும்-நொந்து நிற்கையிலே நான்-படிச்சக் கல்வியிலே
தீர்வெதுவும் காணேனே ஐயஹோ-என் செய்வேனே
(Short Beats)
காசுக்கு ஆசைப்பட்டேன் நான் அப்புறந்தான் தெரிஞ்சுக்கிட்டேன்
கல்வி-தரும் சல்லிக்காசும் என் கூட-வந்தி..டாது-என்று
(MUSIC)
நானிப்போ முடிவெடுத்து உண்மையிலே பிடிப்பெடுத்து
நாளும்-அதைப் படிக்கையிலே தெரியுதய்யா ஒரு விளக்கம்
தெரிந்ததெல்லாம் வீண்-கனவு அறியாமை வான்-அளவு
இந்த-மட்டும் போகட்டுமே நான்-இனிமேல் முயன்றிடுவேன்
நான்-இன்றே முடிவெடுத்தேன் ..ஒ…ஓ..ய்.. நான் இன்றே முயன்றிடுவேன்
***தாமரை மலர்ந்திடவே அந்த சூரிய-நாடியுடன்
 கூடிச்-செல்ல சந்திரனின் குளிர் நாடி-வந்து சேராதோ

நூற்றுக்கு நூறெடுத்தே நான் ஏட்டுச்-சுரை படித்தேனே.. ஓய்
எள்ளளவும் பயனில்லையே அதுவோ இவ்வுலகு வரை-தானே
Ø  * இங்கிருக்க = இவ்வுலகத்தில் வசதியாக வாழ
      அங்கிருக்க = மறு உலகில் ஆனந்தமாய் வாழ
       வசதியாக வாழ பணம் சம்பாதிக்க மட்டுமே ஏட்டுக் கல்வி பயன் படுகிறது. உண்மை விழுக்கல்வி (value based education) இக்கால கல்வி திட்டத்தினின்று அறவே விலக்கப்பட்டது என்பதே பொருள்.
Ø  ** பிறப்பறுத்து செல்லும் நாளன்றைக்கு ஏட்டுக் கல்வியோ செல்வமோ பயன் தராது
Ø  ***இடை பிங்கலை நாடிகள் ஒருங்கிணைந்து செயலாற்றச் செய்து அதன் மூலமாக சஹாஸ்ராரத்திற்கு குண்டலினியை எழச் செய்து சஹஸ்ரதளத் தாமரையை மலரச் செய்யும் ப்ராணாயாமப் பயிற்சியில் ஆரம்பிக்கும் ஆழ்நிலை தியானம்

Comments