1. இன்றே உத்தம ரிஷிகள் (நீங்கள் அத்தனை பெரும்)

(வேதம்)
இன்றே உத்தம-ரிஷிகள் தந்த-நல் வேதம் ஓதுங்கள் (2)
 நன்றே விளங்கிடும்-போதம் என்பதை நீங்கள் நம்புங்கள்

நல்லவரெல்லாம் விண்ணவராவார் -
பொல்லாதவரே இல்லாதிருப்பார் பூமியிலே

இன்றே உண்மையில்-உண்மை என்பது என்ன -
வேத லட்சியம் என்பது என்ன காணுங்களேன்

இன்றே உத்தம ரிஷிகள் தந்த நல் வேதம் ஓதுங்கள்
நன்றே விளங்கிடும்-போதம் என்பதை நீங்கள் நம்புங்கள்
(MUSIC)

அழகாகத் தூங்கும்-ஒரு கருநாகம் நன்றே + (SM)
அதுவாய்-எ..ழும்பும் உந்தன் திருவேதம் கேட்டே + (SM)
சரியான நேரம் தன்னில் அது-வந்து உன்னில் 
சுடர்விட்டுன் ரூபம்-காட்டும் அது-என்றும் உண்மை 
தொல்லைகள் எல்லாம் விட்டிலைப் போலே
பவபயமெல்லாம் தூசினைப் போலே போகுமடா
ஊனைக் கடந்திடும் பாக்கியம் தருமே
ஊழ்வினை வென்றிடும் யோக்கியம் வருமே காண் தோழா
இன்றே உத்தம ரிஷிகள் தந்த நல் வேதம் ஓதுங்கள்
நன்றே விளங்கிடும்-போதம் என்பதை நீங்கள் நம்புங்கள் 
(MUSIC)
உன்-கையில் இல்லை-ஏதும் எனும்-ஞானம் காட்டும் + (SM)
அதுவாகத் தோன்றும்-என்றும் இறைமீது நாட்டம் + (SM)
என்றைக்கும் கேட்டிருக்கும் ஓம்-என்ற பாட்டும் 
அப்போது விலகாதோ நீ-கொண்ட மூட்டம் 
மானிடதேக உணர்வுஇராது இம்மியும்மோக நினைவுஎழாது காண்தோழா
பலநாள் வேதம் ஓதியபலனை ஒருநாள்நீயும் பெற்றிடுவாயே பொறு-தோழா

இன்றே உத்தம ரிஷிகள் தந்த நல் வேதம் ஓதுங்கள்
நன்றே விளங்கிடும்-போதம் என்பதை நீங்கள் நம்புங்கள்
 
(2) 

Comments