17. சங்கரமே சந்த்ர சேகரமே (சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே)

(#** சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே)
(* அவதார மஹா புருஷர் காஞ்சி மாமுனிவர்  )
ஐயா இறையே-நீ பெருமானே குருநாதா
இந்நாள் மறவாதே நினைக்கிறேன் மனத்து உன்னை
ஓர்-தாய் தந்தையைப் போல் ஆண்டவன் போல் அருள்புரியும்
ஐயா உனக்கு ஈடாய் குரு-காணேன் இனி-நானே
___________
சங்கர..மே-சந்த்ர சேகரமே இறைவா
சங்கரமே சந்த்ர சேகரமே
 உன்னை சேவிக்கவே இருக்கு எந்தன் சிரமே
(2)
சங்கர..மே-சந்த்ர சேகரமே
அர்த்தமில்லாமல் உழல் வாழ்க்கையிலே (2)
வந்து பாதையைக் காட்டிய-நீ அன்பின் எல்லை
சங்கர..மே-சந்த்ர சேகரமே
(MUSIC)
சக்திக்கிறைவன் என்னும் திருஉருவே
அந்த பரமசிவம் என்றே நினதுருவே
(2)
சத்தியமாம் அதுவும் உனதுருவே (2)
என்று பூமியிலே காட்சி-தந்த  ஜகத்-குருவே இறைவா
சங்கர..மே-சந்த்ர சேகரமே
(MUSIC)
மண்ணில் உறவு-எந்தன் வீடு வரை
எந்தன் உயிர்-மனை..யாளுமன்று வீதி-வரை
(2)
காடுவரை அன்றோ பிள்ளைகளும் (2)
எங்கும் கூட-வந்து காப்பதுந்தன் திருவருளே இறைவா
சங்கர..மே-சந்த்ர சேகரமே உன்னை
சேவிக்க..வே-இருக்கு எந்தன் சிரமே
சங்கர..மே-சந்த்ர சேகரமே .. இறைவா…!
______________________________

Comments