(#** ஆனிமுத்து வாங்கி வந்தேன்)
(* இறைஞ்சல்/இறை கெஞ்சல் )
நானிப்படி ஆகிவிட்டேன் எப்படித் தெரியவில்லே
ஏனிப்படி முழுகி விட்டேன் உலக வாழ்க்கையிலே
(1+SM+1)
மேலே இருந்தென்னை ஆட்டும்அவனுக்கு வேலைஇல்லை அடியோ (2)
அடியோ..
நானிப்படி ஆகிவிட்டேன் எப்படித் தெரியவில்லே
ஏனிப்படி முழுகி விட்டேன் உலக வாழ்க்கையிலே
(MUSIC)
கண்ணீர்-விட்டேன் ஏனென்று அவன்-என்னைக் கேட்கவில்லை
ஏறிட்டும் அவன்-என்னைப் பார்க்கவில்லை
ஆறுதல் வார்த்தையும் கூட இல்லை
(2)
அந்த சொர்க்கத்தில் ஆண்டவன் செய்வதென்ன
எந்தன் பக்கத்திலே-அவன் வந்தாலென்ன
என்னைப் படைச்சதும் மண்ணைப் படைச்சதும்
அன்றைக்கே அவன் வேலை முடிஞ்சுதடி
ஒரு-வாட்டி இரு-வாட்டி பல-வாட்டி நான் பாடி அம்மம்மா
சொல்வது எத்தனை வாட்டியடி
சொல்வது எத்தனை பாட்டிலடி
நானிப்படி ஆகிவிட்டேன் எப்படித் தெரியவில்லே
ஏனிப்படி முழுகி விட்டேன் உலக வாழ்க்கையிலே
(MUSIC) + ஆ..ஆ..
ஆயி..ரம்-கண் கொண்டவன்-பார்ப்பது யாரையடி
ஆயிரம் நாமங்கள் ஏதுக்கடி கூப்பிட்டா..லும்-காது கேக்காதடி
பந்த உள்ளத்தைக் கொண்டே நான் வாழ்ந்ததிலே
அந்த உள்ளத்தில் நிம்மதி போச்சுதடி
(2)
*பேட்டி நமக்கெப்போ டூட்டி தானா இப்போ
கேட்டுப் பலன்-ஏதும் இல்லையடி
(2)
இன்றைக்கு நாளைக்கு என்றைக்குத் தான்-என்று
ஏமாந்து வாழ்வது ஒன்றே தான் நம் கதி (2) ..ஓஓ.. ஓஓ.. ஆஆ
*பேட்டி-இறைவனின் பேட்டி/காட்சி (முக்தி)
Comments
Post a Comment