10. மாண்பொன்று நீ-கொள்ள (மான் குட்டி இப்போது என்கையிலே)

(#** மான் குட்டி இப்போது என்கையிலே) (* ஞானம்) (* வேதம்)
மாண்பொன்று நீ-கொள்ள வேறில்லையே ஞானத்தின் மேலாகவே
(Short Music)
வேதத்தின் மேலொன்று வேறில்லையே ஞானத்தை நீ கொள்ளவே
(Short Music)
மாண்பொன்று நீ-கொள்ள வேறில்லையே ஞானத்தின் மேலாகவே
நல்ல வேதத்தின் மேலொன்று வேறில்லையே ஞானத்தை நீ கொள்ளவே
நீ-வேதம் சென்றோதவே தோன்றும் நெஞ்சே-உன் உண்மை-நிலை (2)
(MUSIC)
தாய்ப்-பாலைப் போலாகும் ஊட்டம்-தனை தந்து மெய்யூட்டும் நல்-வேதமே (2)
கேளிக்கை விட்டோடி என்-நெஞ்சமே நீ உட்காரதை ஓதவே (2)
ஆனந்தம் ஞாலத்திலா இல்லை நல்வேத ஞானத்திலா
நீ-வேதம் சென்றோதவே தோன்றும் நெஞ்சே-உன் உண்மை-நிலை
மாண்பொன்று நீ-கொள்ள வேறில்லையே ஞானத்தின் மேலாகவே
(MUSIC)
கண்ணென்று வேதத்துகோர்-நாமமாம் அது-காட்டா த ஞானம் இல்லை
அவ்வேதம் சொல்கின்ற த்யாகம்-ஒன்றே நேர் காட்டதோ தெய்வம் உன்னில்
வானத்தில் மட்டும் இல்லை நெஞ்சில் காணாயோ இறை ராச்சியம்
நீ-வேதம் சென்றோதவே தோன்றும் நெஞ்சே-உன் உண்மை-நிலை
மாண்பொன்று நீ-கொள்ள வேறில்லையே ஞானத்தின் மேலாகவே
(MUSIC)
நோய்-போக மருந்தொன்று உண்டில்லையா -
வேதம் அறியாமைக்கது-போல்-ஐய்யா
(2)
நல்-வேதம் மெய்யாய்த்-து..லங்கும் நன்றாய்-
அது ஒன்றுக்கு-நான்கில்லையா
(2)
நான்-என்னும் உண்மை-நிலை காட்டும் நால்வேதச் செல்வங்களே
நீ-வேதம் சென்றோதவே தோன்றும் நெஞ்சே-உன் உண்மை-நிலை
மாண்பொன்று நீ-கொள்ள வேறில்லையே ஞானத்தின் மேலாகவே
அந்த வேதத்தின் மேலொன்று வேறில்லையே ஞானத்தை நீ கொள்ளவே
நீ-வேதம் சென்றோதவே தோன்றும் நெஞ்சே-உன் உண்மை-நிலை
நன்றே-உன் உண்மை-நிலை

Comments